வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களுக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல்!!

508

இடியுடன் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

நாட்டின் கிழக்கு, ஊவா மாகாணங்களிலும், மாத்தளை, நுவரெலியா, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மாகாணத்திலும், காலி மாவட்டத்தின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

இதன்படி, வட மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

அத்துடன், வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மணிக்கு 30 தொடக்கம் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.