வவுனியாவில் கஞ்சா பொதியுடன் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது!!

1032

A6

வவுனியாவில் கஞ்சா பொதியுடன் இராணுவ சிப்பாய் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம், வசாவிளான் பிரதேசத்திலுள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவச் சிப்பாய் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். விடுமுறையின் நிமித்தம் வவுனியா சென்றிருந்த போது வவுனியா பொது மலசலகூடப் பகுதியில் வைத்து நேற்று வெள்ளிக்கிழமை இவர் கைதுசெய்யப்பட்டார் என்று பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

இவரிடமிருந்து 1 கிராம் 680 மில்லிகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டு வருகின்றனர் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.