திடீரென தோன்றிய ஏரி சுற்றுலாத்தலமாக மாறிய அதிசயம்!!

809

ஆபிரிக்க நாடான துனிசியாவில் திடீரென தோன்றிய ஏரி சுற்றுலாத்தலமாக மாறியுள்ளது. ஆபிரிக்க நாடான துனிசியாவின் மத்தியில் உள்ள கஃப்சா பகுதியில் ஒரு மில்லியன் கன மீட்டர் கொள்ளளவும், 10 முதல் 18 மீ வரையிலான ஆழத்துடனும் திடீரென ஏரி ஒன்று தோன்றியுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஆனால் இந்த பகுதியில் சுரங்கங்கள் அதிகம் காணப்படுவதால் தண்ணீர் மாசுபட்டதாகவோ, கதிரியக்கத்தன்மை கொண்டதாகவோ இருக்கக்கூடும் என அவர்கள் அஞ்சுகின்றனர்.

இவர்களின் அச்சத்திற்கு ஏற்ப முதலில் தெளிவாக காணப்பட்ட அந்த நீரில் தற்போது அதிகளவில் பாசிப்படிந்து உள்ளது.

எனினும் அதை பொருட்படுத்தாத அப்பகுதி மக்கள் தங்களை வாட்டியெடுக்கும் வெயிலிருந்து தப்பிக்க இந்த ஏரியில் ஆனந்தமாய் குளித்து மகிழ்கின்றனர். சிலர் இதனை ஒரு அதிசயம் என்று கூறினாலும் சிலரோ சாபம் என்று கருதுகின்றனர்.

தற்போது இங்கு 600க்கும் மேற்பட்ட மக்கள் நீச்சல், ஸ்கூபா டைவிங் என்று பல்வேறு தரப்பட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வெப்பத்தைத் தணித்துக் கொள்கின்றனர் என்றும் தற்சமயம் இந்த ஏரி சிறந்த சுற்றுலாத்தலமாக மாறியுள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே நில அதிர்வு செயல்பாட்டினால் நீர்மட்டம் உயர்ந்து இந்த ஏரி தோன்றியிருக்கலாம் என்று சில புவியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

L1 L2 L3 L4