
வவுனியா மாவட்டத்தில் கடந்த 7 மாதத்தில் மட்டும் 18 தற்கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.கடந்த ஜனவரி முதல் ஜீலை வரையான காலப்பகுதியில் 14 ஆண்களும் 4 பெண்கள் அடங்கலாக 18 போர் தற்கொலை செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதில் ஜனவரி மாதத்தில் இரு ஆண்களும், பெப்ரவரி மாதத்தில் ஒரு ஆணும், மார்ச் மாதத்தில் இரு ஆண்களும் ஒரு பெண்ணும், ஏப்ரல் மாதத்தில் இரு ஆண்களும், மே மாதத்தில் நான்கு ஆண்களும், யூன் மாதத்தில் இரு ஆண்களும், யூலை மாதத்தில் மூன்று பெண்களும் ஒரு ஆணுமே இவ்வாறு தற்கொலை செய்துள்ளனர்.
குடும்ப தகராறு, காதல் பிரச்சனை போன்றவற்றினாலேயே அதிக தற்கொலைகள் இடம்பெற்றுள்ளன. இத் தற்கொலைகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இதேவேளை மார்ச் மாதம் புகையிரதத்தில் மோதுண்டு இறந்த இரு ஆண்களில் ஒருவரின் சடலம் இனம் காணப்படாத நிலையில் அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.




