வவுனியாவில் தொடர்ந்து நிலவிவரும் கடும் வறட்சி காரணமாக அங்குள்ள குளங்களின் நீர் வற்றியுள்ளது. இதனால் குளத்து நிலம் சிறுவர்களினதும், இளைஞர்களினதும் விளையாட்டுத் திடலாக மாறி வருகிறது.
கடந்த சில மாதங்களாக மழைவீழ்ச்சி இல்லாததால் குளங்களில் உள்ள நீர் சடுதியாகவற்றியுள்ளதுடன் வற்றியுள்ள குளங்களின் பரந்த நிலத்தில் தினமும் காலை, மாலை வேளைகளில் ஒன்றுகூடும் சிறுவர்கள் ஓடித் திரிந்து விளையாடுவதுடன் இளைஞர்கள் கிரிக்கெட் மைதானமாகவும் அதனைப் பயன்படுத்தி வருகின்றனர்.
வறட்சியினால் வவுனியாவில் பல பகுதிகளில் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவி வருவதுடன், விவசாயிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.





