இரு பேருந்துகள் மோதி விபத்து : மாணவர்கள் உட்பட பலர் காயம்!!

612

தங்காலை – வீரகெட்டிய வீதியில் 02 ஆவது மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (16.01) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இரண்டு தனியார் பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயமடைந்துள்ள நிலையில் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.