சென்னை சென்ற இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அதிரடியாகத் திருப்பி அனுப்பி வைப்பு!!

506

cricket

சென்னையில் இடம்பெறவிருந்த 15 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய லீக் கிரிக்கெட் போட்டி ஒன்றில் பங்கேற்க வந்த 16 இலங்கை கிரிக்கெட் வீரர்கள் திருப்பி அனுப்பட்டுள்ளனர்.

சென்னையில் 15 வயதுக்குட்பட்டவர்கள் விளையாடும் ஜூனியர் கிரிக்கெட் போட்டிகள் இன்று 4 ஆம் திகதி முதல் 7ம் திகதி வரை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த போட்டியில் கலந்துகொள்வற்காக இலங்கையில் இருந்து 16 பேர் கொண்ட கிரிக்கெட் குழு நேற்றிரவு சென்னை வந்திருந்தது.

அண்மையில், இலங்கை பாதுகாப்பு துறையின் இணையதளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரைப் பற்றி தவறாக சித்தரித்து வெளியான செய்தியால் தமிழகம் முழுவதும் இலங்கைக்கு எதிரான எதிர்ப்பு அலை எழும்பியுள்ளது.

இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க வந்த குழுவினரை இன்று காலை இலங்கைக்கு திருப்பி அனுப்பி விட்டதாக சென்னை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.