போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்காக உயிரை இழந்த இளைஞன்!!

1422

Photo

அமெரிக்காவில் நபர் ஒருவர் புகைப்படத்துக்காக துப்பாக்கியுடன் போஸ் கொடுத்த போது தவறுதலாக தன்னைத் தானே சுட்டுக் கொண்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அமெரிக்காவின் மெக்சிகோ நகரை சேர்ந்த ஆள்கார் அகுலியார்(21) என்பவர் சமூக வலைதளங்களில் தன்னைத் தானே விதவிதமாக புகைப்படங்கள் எடுத்து பதிவேற்றம் செய்வதில் ஆர்வம் கொண்டுள்ளார்.

இவர் தனது கார், விலைமிகுந்த பைக் மற்றும் அழகிய பெண்களுடன் போஸ் கொடுத்து பதிவேற்றம் செய்துள்ளார். இந்நிலையில், இவர் சற்று வித்தியாசமாக, துப்பாக்கி ஒன்றை கடன் வாங்கி, விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படம் எடுக்கும் போது தவறுதலாக தன்னைத் தானே தலையில் சுட்டுக் கொண்டுள்ளார்.

இதனைதொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.