வவுனியாவில் தடம்புரண்ட யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம்!!

2210

யாழ். காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் தொடருந்து ஓமந்தை தொடருந்து நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது.

இந்த தொடருந்தின் ஒரு பெட்டி 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் தடம் புரள்வுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.



இருப்பினும், தொடருந்தின் தடம்புரள்வை சரிசெய்யும் பணியில் ரயில்வே திணைக்கள ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

மஹாவவிலிருந்து காங்கேசன்துறை வரையிலான ரயில் பாதை பழுதுபார்க்கப்பட்டு திறக்கப்பட்ட பின்னர் பதிவான முதல் ரயில் தடம் புரண்ட சம்பவம் இதுவாகும்.