காலங்கள் கடந்தாலும் காதல் ஒன்றுதான் என நிரூபித்த தம்பதியினர்!!

607

அமெரிக்காவை சேர்ந்த தம்பதியினர் கைகோர்த்தப்படி ஒரே நாளில் படுக்கையில் இறந்துள்ள சம்பவம் அவர்களின் அளவுகடந்த காதலை உணர்த்தியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோனியா மாகாணத்தில் திருமணமாகி 62 ஆண்டுகளான முதிர்ந்த தம்பதியினர் ஒருவர், இணைப்பிரியாமல் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்துள்ளனர்.

டான்- மெக்சி என்ற இந்த தம்பதியினர் 4 மணி நேர இடைவேளையில் கைக்கோர்த்தபடி படுக்கையில் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.

இதில் டான் கடந்த வாரம் கீழே விழுந்து தனது இடுப்பு எலும்புகள் உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, அதே சமயத்தில் மெட்சின் புற்றுநோயால் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் இறப்பிலும் பிரியாத காதலர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் கைக்கோர்த்தவாறே இறந்துள்ளனர்.

L3 L2 L1