இங்கிலாந்தில் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று பச்சிளம் குழந்தைகள் தற்போது சூப்பர் ஸ்டார்களாக மாறிவிட்டனர்.
இங்கிலாந்தின் சவுத் வேல்ஸ் பண்டிபூல் பகுதியை சேர்ந்த தம்பதிகள் கரண்- இயன் கில்பர்ட். இந்த தம்பதிகளுக்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்தன. இவர்களுக்கு பேபன், மாடிசன் மற்றும் பைகே என பெயரிட்டுள்ளனர்.
மூன்று குழந்தைகளும் எந்த வித்தியாசமும் இல்லாமல் அச்சு அசலாக ஒரே மாதிரி இருப்பதால் பெற்றோர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே குழந்தையின் தந்தை ஒரு வித்தியாசமான யோசனையை தனது மனைவிக்கு கொடுத்துள்ளார்.
அதன்படி மூன்று குழந்தைகளின் நகங்களிலும் மூன்று வெவ்வேறு நிறங்களில் நக பாலீஷ் போட்டு குழந்தைகளின் வித்தியாசத்தை கண்டுபிடிக்கலாம் என்று முடிவு செய்தனர்.
இந்த மூன்று குழந்தைகளுக்காக வாரந்தோறும் 84 பாட்டில்கள் பால் மற்றும் 120 நேப்பிஸ் என்று கூறப்படும் குழந்தைகளின் ஆடைகளை பயன்படுத்துவதாகவும் அதன் பெற்றோர்கள் கூறினர்.
குழந்தையின் தாயார் கிரண் கூறுகையில், இது எங்களுக்கு வித்தியாசமான வேடிக்கையான ஆண்டாக உள்ளது. ராணுவ நடவடிக்கை மாதிரி இதை நாங்கள் ஒபரேஷன் மூவர் என அழைக்கிறோம்.
எனது மகள்கள் மூவரும் ஒரு வயதை அடையும் முன்பே பெரிய டிவி ஸ்டாராகி விட்டனர் என மகிழ்ச்சி பொங்க கூறியுள்ளார்.






