
நித்யானந்தாவிடம் ஆண்மை பரிசோதனை நடத்த இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக சில்மிஷ சாமியார் நித்யானந்தாவிடம் ஆண்மை பரிசோதனை நடத்த கர்நாடக பொலிசார் திட்டமிட்டிருந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நித்யானந்தா மனு தாக்கல் செய்தபோதும், அதை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், நித்யானந்தாவுக்கு ஓகஸ்ட் 6ம் திகதி, அதாவது நாளை, ஆண்மை பரிசோதனை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
அதனை பெங்களூரிலுள்ள விக்டோரியா, அரசு மருத்துவமனையில் நடத்தவேண்டும் என உயர்நீதிமன்றம் கூறியிருந்தது. இந்நிலையில் ஆண்மை பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நித்யானந்தா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு போடப்பட்டுள்ளது.
இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், நித்யானந்தாவுக்கு ஆண்மை சோதனை நடத்த இடைக்கால தடை விதித்துதுள்ளது.
மேலும் அடுத்த வாரம் மீண்டும் இந்த மனு மீது விசாரணை நடக்கும்போது பாதிக்கப்பட்டோர் தரப்பில் வாதத்தை முன்வைக்கலாம் என தெரிவித்துள்ளது.





