திருநங்கையை மணமுடிக்க அங்கீகாரம் வேண்டும் : அரசிடம் அனுமதி கேட்கும் இளைஞர்!!

984

Marry

திண்டுக்கல்லில் திருநங்கை ஒருவரை திருமணம் செய்ய அரசு உதவ வேண்டுமென்று இளைஞர் ஒருவர் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

தேனி மாவட்டம் போடியை சேர்ந்த திருநங்கை தாமரை (26) என்பவருக்கும் திண்டுக்கல் அருகே உள்ள வீரக்கல் வண்ணம்பட்டியை சேர்ந்த முத்து என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பியதால் திருமணம் செய்ய முடிவு செய்தபோது, முத்துவின் பெற்றோர்களும் உறவினர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து முத்து, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார்.

அதில் நாங்கள் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தற்கு பெற்றோர், உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, எங்களை பிரிக்கவும் முயற்சி செய்துள்ளனர்.

மேலும் எங்கள் திருமணத்தை சமூகம்தான் அங்கீகரிக்கவில்லை அரசாவது அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றும், திருமண உதவி தொகை, சேர்ந்து வாழ வீடு வழங்கி பாதுகாப்பும் கொடுக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, இயற்கைக்கு முரணான இவர்களின் திருமணத்துக்கு அங்கீகாரம் வழங்க சட்டத்தில் இடம் உள்ளதா என்றும், அவர்களுக்கு சட்டப்படி என்ன உதவி, பாதுகாப்பு வழங்கலாம் என சமூகநல அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

இந்நிலையில் திருநங்கை தாமரை நிருபர்களிடம் கூறுகையில், அன்பு, அரவணைப்பு கிடைக்காததால் 18 வயதில் வீட்டை விட்டு வெளியேறிய நான், அன்றாட வாழ்க்கைக்காக சக திருநங்கைகளுடன் கடை வீதிகளில் சென்று உதவி கேட்பேன்.

அப்போதுதான் பெட்ரோல் நிலையத்தில் வேலை செய்யும் முத்து என்னிடம் ஆறுதலாக பேசுவதோடு, மறுக்காமல் உதவி செய்வார்.

இதனால் அவர் மீது எனக்கு ஏற்பட்ட மரியாதை காதலாக மாறியது. அவரை திருமணம் செய்தால் எனக்கு பாதுகாப்பும் அன்பும் கிடைக்கும் என நினைத்து எனது விருப்பத்தை அவருடன் தெரிவித்தேன். மேலும், அவர் என்னை ஏற்றுக்கொண்டதால் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.