நாடு திரும்பிய திருமதி உலக அழகிக்கு பெரும் வரவேற்பு!!

705

அமெரிக்காவில் நடைபெற்ற 40 ஆவது திருமதி உலக அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த இலங்கையைச் சேர்ந்த இஷாதி அமந்தா, இன்று (04) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

உலகின் 40 நாடுகளைச் சேர்ந்த திருமணமான அழகு ராணிகள் பங்கேற்ற இந்தப் போட்டி அமெரிக்காவின் லொஸ் வேகாஸ் நகரில் கடந்த மாதம் 30 ஆம் திகதி நடைபெற்றது.

இஷாதி அமந்தா இன்று (04) தோஹாவிலிருந்து கத்தார் விமான சேவையின் QR – 658 விமானத்தின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இந்நிலையில் அவரை வரவேற்க ,தேசிய பணிப்பாளர் சந்திமால் ஜயசிங்க மற்றும் இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் ருக்மல் சேனநாயக்க,

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் பணிப்பாளர் சுபாஷினி பெரேரா மற்றும் அதன் உதவிப் பணிப்பாளர் சுரேஷனி பிலபிட்டிய ஆகியோர் விமான நிலையத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.