மேயர் தேர்தலில் தோல்வியை தழுவிய 5 வயதுச் சிறுவன்!!

655

அமெரிக்காவில் உள்ள சிறிய நகரம் ஒன்றிற்கு மேயராக பதவி வகித்து வந்த 5 வயது சிறுவன் தற்போது தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள டார்செட் என்ற சிறு நகரத்தில் வெறும் 9 முதல் 28 மக்கள் மட்டுமே வாழ்ந்து வருவதால், இங்கு அரசாங்க ஆட்சி இல்லை.

அதனால் இங்குள்ள மக்கள் எத்தனை முறை வேண்டுமானலும் ஒரு டொலர் செலுத்தி வாக்களித்து, தங்களது தலைவரை தெரிவு செய்துக் கொள்ளலாம்.

மேலும் இங்கு நடைபெறும் திருவிழாவின் போது குலுக்கல் முறையில் தேர்தல் நடப்பது வழக்கமாகும்.

இந்நிலையில் கடந்த இரு ஆண்டுகளாக மேயராய் பதவி வகித்து வந்த ராபர்ட் பாபி (5) என்ற சிறுவன் பல கருணை இல்லங்களுக்கு நன்கொடை திரட்டியும், ஐஸ் கிரீமை பாரம்பரிய உணவாக அறிமுகம் செய்து, தனது பணிகளை சிறப்பாக செய்துள்ளான்.

ஆனால் சமீபத்தில் நடந்த இந்தாண்டிற்கான தேர்தலில் 16 வயது இளைஞரான எரிக் முல்லர் என்பவர் மேயராக வெற்றி பெற்றதால், பாபி தோல்வியை சந்தித்துள்ளான்.

எனினும் அதை பெரிதாய் எடுத்துக் கொள்ளாத பாபி கூறியதாவது, இந்த இரண்டு ஆண்டுகள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது என்றும் இப்போது நான் விலகும் தருணம் வந்துவிட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

B1 B2 B3