அதிரடியாக அம்பலமாகப்போகும் கிளிண்டனின் ரகசியங்கள்!!

1012

Clinton

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனின் ரகசியங்களை வெளியுலகிற்கு வெட்டவெளிச்சமாக்க போவதாக அவரது நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டனின் நெருங்கிய நண்பராக இருந்தவர் பத்திரிகையாளர் ஆன்டி. இவர் சீரியல் கொலைகாரர் ஒருவரை கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட பிறகு, பாலஸ்தீனத்தில் தலைமறைவாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் இவர் கிளிண்டனின் ரகசியங்களை “பில் இஸ் புல்” என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், மக்களின் உயிர்களை கருத்தில் கொண்டதால் தான், அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் முன்னாள் தலைவன் ஒசாமாவை கொல்லவில்லை என கிளிண்டன் கூறியது பொய்.

ஒசாமாவின் மிரட்டல்களை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று பில் கிளிண்டன், பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். அப்போது நான் ஒசாமாவால் நிகழப்போகும் அட்டூழியங்களை பற்றி கூறியும், அதை அவர் கண்டுகொள்ளவே இல்லை.

ஒசாமா விடயத்தில் கிளிண்டன் பொய் கூறியது தான் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நான் ஜனாதிபதியாக கூடாது என்பதற்காக என்னை அவர் அரசியலுக்கு வரவிடவில்லை.

மேலும் இவர் மோனிகா என்ற பெண்ணுடன் கள்ள உறவு வைத்திருந்ததும், அவரிடம் தன் மனைவி ஹிலாரியை தனது அத்தை என கூறிய அனைத்தையும் நான் புத்தகத்தில் விவரி்ப்பேன் என கூறியுள்ளார்.