ஒரே மரத்தில் காய்க்கும் 40 ரக பழங்கள்!!

1370

Tree

அமெரிக்காவைச் சேர்ந்த ஓவியர் சாம்வன் அகென். இவர் ஒரு புதுவிதமான மரத்தை உருவாக்கியுள்ளார். ஒட்டு முறையில் பல மரங்களை சேர்த்து அதை ஒரே மரமாக மாற்றியுள்ளார். அந்த மரத்தில் 40 விதமான பழங்கள் காய்கின்றன.

இந்த ஒட்டு ரக முறையை இவர் கடந்த 2008ம் ஆண்டு தொடங்கினார். தற்போது இந்த மரம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

வசந்த காலம் தொடங்கியவுடன் இந்த மரத்தில் இளஞ்சிவப்பு, கருஞ்சிவப்பு, மற்றும் வெள்ளை நிறத்தினால் ஆன மலர்கள் டன் கணக்கில் பூத்துக் குலுங்குகின்றன.