பர்தா இன்றி தொலைக்காட்சியில் தோன்றிய பெண்ணால் பரபரப்பு!! (வீடியோ)

842

சவுதியை சேர்ந்த பெண் ஒருவர் தொலைக்காட்சியில் பர்தா அணியாமல் செய்தி வாசித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி அரேபிய அரசு, அல் – அக்பாரியா என்ற தொலைகாட்சி நிறுவனம் தொடங்கி பத்தாண்டுகள் முடிந்த நிலையில், முதல் முறையாக செய்தி வாசிப்பதற்கு, பெண் செய்தி வாசிப்பாளரை நியமித்துள்ளது.

இந்நிலையில் செய்தி வாசித்த பெண் பர்தா அணியாமல், தொலைக்காட்சியில் தோன்றியுள்ளார். இப்பெண் இவ்வாறு தோன்றியதை சிலர் வரவேற்றாலும், பலர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எனவே இத்தகைய சம்பவம் மீண்டும் நடக்காது, என தொலைக்காட்சி நிறுவனம் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

F1 F2 F3