சவுதி ஆண்களுக்கு திடீர் திருமணத் தடை!!

802

Wedding

சவுதி அரேபிய அரசு அந்நாட்டு ஆண்களுக்கு திடீர் தடை ஒன்றை விதித்துள்ளது. சவுதி அரேபியாவைச் சேர்ந்த கிட்டத்தட்ட 5 லட்சம் பெண்கள் பாகிஸ்தான், வங்கதேசம், சாட் மற்றும் மியான்மர் போன்ற நாடுகளில் வசித்து வருகிறார்கள்.

அதன்படி இந்த நாடுகளில் வசிக்கும் பெண்களை சவுதி நாட்டைச் சேர்ந்த ஆண்கள் திருமணம் செய்யக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடை குறித்து மெக்கா பொலிஸ் இயக்குநர் அஸ்ஸாப் அல் குரேஷி கூறுகையில், வெளிநாட்டினரை, குறிப்பாக வெளிநாடுகளில் வசிக்கும் சவுதி அரேபியப் பெண்களை மணப்பது தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற திருமணங்களுக்கு கடுமையான விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. திருமணத்திற்கு முன்பு தாங்கள் மணக்கப் போகும் பெண்கள் குறித்த விவரத்தை சமர்ப்பிப்பதோடு, ஆட்சேபனை இல்லை சான்றிதழையும் பெற வேண்டும்.

மேலும், மனுதாரருக்கு வயது 25க்கு மேல் இருக்க வேண்டும். உள்ளூர் மேயரிடம் தங்களது அடையாளச் சான்றிதழ்களை ஒப்பம் பெற்று வர வேண்டும். குடும்ப அட்டையும் இணைக்கப்பட வேண்டும்.

ஏற்கனவே திருமணமானவராக இருந்தால் அவரது மனைவி உடல் ஊனமுற்றவரா அல்லது பெரும் வியாதியஸ்தரா என்பது குறித்து மருத்துவச் சான்றிதழ் பெற்று இணைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

சவுதி அரசின் புதிய திருமணத் தடை அந்நாட்டு ஆண்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.