கனடாவில் தலைகீழாக கவிழ்ந்த பயணிகள் விமானத்தால் பரபரப்பு : தெய்வாதீனமாக தப்பிய உயிர்கள்!!

422

கனடாவின் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று தரையிறங்கியவுடன் தலைகீழாக கவிழ்ந்த2மை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் நிலவியுள்ள புதிய டேப் மண்டல ஜெட் பனிப்புயலைத் தொடர்ந்து காற்றுடன் கூடிய வானிலைக்கு மத்தியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.



மினியாபோலிஸில் இருந்து காலை 11.47 மணியளவில் புறப்பட்ட டெல்டா விமானம் கனடாவின் டொராண்டோவில் பனிமூட்டமான ஓடுபாதையில் அதிக பனிமூட்டம் காரணமாக தரையிறங்கும் போது தலைகீழாகக் கவிழ்ந்துள்ளது.

தெய்வாதீனமாக தப்பிய உயிர்கள்

விமானத்தில் இருந்த 76 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்கள் உட்பட 80 பேரில் 18 பேர் வரையில் பலத்த காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குழந்தைகள் உட்பட காயமடைந்த அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக கனடா தகவல்கள் தெரிவிக்கின்றன.

குளிர்ந்த காலநிலை காரணமாக, விமானம் கவிழ்ந்து நீண்ட தூரம் இழுத்து சென்ற நேரத்தில் ஏற்பட்ட பயங்கரமான உராவுகளின் போதும் வெடித்து சிதறாமல் இருக்க முக்கிய காரணமாக அமைந்ததாக கூறப்படுகின்றது.

காயமடைந்தவர்களில் குழந்தை உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளதாக அவசர சேவைகள் தெரிவிக்கின்றன.

விபத்தின் போது விமானத்தில் 76 பயணிகளும் 4 பணியாளர்களும் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.