துப்பாக்கிச் சூட்டில் தந்தையும் மகளும் பரிதாபமாக பலி!!

1021

அம்பாந்தோட்டை மாவட்டம் மித்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடேவத்த சந்தி பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சிறுமி உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.


உந்துருளியில் பயணித்தவர்களை இலக்கு வைத்து அடையாளம் தெரியாத தரப்பினரால் நேற்றிரவு (18.02) துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் உந்துருளியை செலுத்திய 39 வயதான நபர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


அத்துடன் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த குறித்த நபரின் மகனும் மகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 6 வயதான மகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த சிறுவன் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு ரி56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.