அனுராதபுரத்தில் இன்று காலை ஒரு பேருந்து தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த தீ விபத்தில் பேருந்தில் பயணித்த ஒருவரே உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பலாங்கொடையிலிருந்து அனுராதபுரத்திற்கு யாத்ரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து தீக்கிரையாகியுள்ளது. பேரூந்தும் முற்றாக தீப்பிடித்து எரிந்துள்ளது.
இந்த தீ விபத்து குறித்து அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதான நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிய முடிகின்றது.