வவுனியாவிலுள்ள புகையிரத நிலையங்களை அழகுபடுத்தும் வவுனியா மாவட்ட சாரணர்கள்!!

1372

சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் ரோபர்ட் பேடன் பவல் பிரபுவின் 168வது பிறந்தநாளை முன்னிட்டு இலங்கை சாரண சங்கத்தின் வவுனியா மாவட்ட கிளையின் சாரணர்கள் வவுனியாவிலுள்ள புகையிரத நிலையங்களை அழகுபடுத்தும் நிகழ்வு இன்று (22.02.2025) காலை 9 மணியளவில் மாவட்ட ஆணையாளர் யோ.கஜேந்திரன் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் இடம்பெற்றது.


இதன்படி வவுனியா புகையிரத நிலையம், தாண்டிக்குளம் புகையிரத நிலையம், ஓமந்தை புகையிரத நிலையம், புளியங்குளம் புகையிரத நிலையம், செட்டிக்குளம் புகையிரத நிலையம் ஆகிய புகையிரத நிலையங்களை இன்று ஒரே நாளில் ஒரே நேரத்தில் அழகுபடுத்தும் செயற்பாடுகளில் வவுனியா சாரணர்கள் ஈடுபட்டனர்.


இத்திட்டம் தேசிய சாரணர் தலைமையகத்தின் கருத்தாக்கம் மற்றும் “Clean SriLanka” உடன் இணைந்து செயற்படும் தேசிய வேலைத்திட்டமாகும்.

இதன் பிரதான நிகழ்வு வவுனியா பிரதான புகையிரத நிலையத்தில் இடம்பெற்றமையுடன் புகையிரத நிலையத்தினை சூழவுள்ள பகுதிகளிலுள்ள பிளாஸ்டிக், பொலித்தீன், ஏனைய கழிவுகளை அகற்றி புகையிரத நிலையத்தினை துய்மையான இடமாக மாற்றியமைத்தனர்.