யாழில் பாடசாலை மாணவன் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு : துயரத்தில் குடும்பம்!!

721

யாழ். வடமராட்சி கரவெட்டி பகுதியில் மாணவன் ஒருவர் வீட்டில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இச் சம்பவம் நேற்று (07) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கரவெட்டி மத்தணி பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான, மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.