சடலமாக மிதந்த இளம் பெண் : காதலன் எடுத்த விபரீத முடிவு!!

804

களு கங்கையின் இலுக்மண்டிய கரையில் மிதந்து கொண்டிருந்த நிலையில், இங்கிரிய, ரய்கம்வத்த பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

கடந்த மார்ச் 2 ஆம் திகதி முதல் இவர் காணாமல் போயிருந்த நிலையில், அவரது சகோதரர் இங்கிரிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்திருந்தார்.

குறித்த இளம்பெண் மார்ச் 2 ஆம் திகதி மாலை 5:30 மணியளவில் இங்கிரிய பல்பொருள் அங்காடியில் பணி முடித்து வெளியேறிய பின்னர் காணாமல் போயிருந்தார்.



பொலிஸ் விசாரணையில், பெண்ணுடன் தொடர்பில் இருந்த ஹல்வத்துர பகுதியைச் சேர்ந்த 30 வயது ஆசிரியர் ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

அவர், மார்ச் 2 ஆம் திகதி குறித்த இளம்பெண் தனக்கு இரண்டு முறை தொலைபேசியில் அழைத்ததாகவும், அதன் பின்னர் எந்த தகவலும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

ஆனால், பெண்ணின் சடலம் கண்டு பிடிக்கப்பட்ட அதே நாளில் (7), அந்த ஆசிரியரும் ஹல்வத்துரவில் உள்ள வீடொன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக புலத்சிங்கள மற்றும் இங்கிரிய பொலிஸார் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.