யாழ்பாணத்தைச் சேர்ந்த 74 வயது நபர் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரை சைக்கிளோட்டி சாதனை!!

317

கொழும்பிலிருந்து 450 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள வடபகுதி யாழ்ப்பாணம் புத்தூர் நகரை துவிச்சக்கரவண்டியின் மூலம் மூன்றே நாட்களில் சென்றடைந்துள்ளார். பருத்தித்துறையைச் சேர்ந்த 74 வயதுடைய செல்வத்தம்பி குலராசா என்பவரே இந்த சாதனை படைத்துள்ளார்.


யாழ்ப்பாணம் – புத்தூர் சென்ற் லூக்ஸ் மெதடிஸ்ற் மிஷன் வைத்தியசாலைக்கு (St.Luke’s Methodist Mission – hospital, Puttur) அத்தியாவசிய சுகாதார வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கான நிதியை திரட்டுவதற்காக இவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

3 தசாப்த காலத்துக்கு முன்பு அவுஸ்திரேலியா நாட்டுக்கு புலம்பெயர்ந்து சென்ற செல்வத்தம்பி குலராசா பருத்தித்துறை – புலோலி கிழக்கை பிறப்பிடமாகக் கொண்டவர் ஆவார்.


இவரது துவிச்சக்கரவண்டி சவாரியில் அவரது இரண்டு ஆண்பிள்ளைகள் உட்பட 70 துவிச்சக்கரவண்டி செலுத்துநர்கள் பங்குபற்றியிருந்தனர். மேலும் இந்த சாதனை மூலம் 1,30,000 பவுண்ட் நிதி திரட்டப்பட்டுள்ளது.