பிரபல நகைச்சுவை நடிகர் சுருளி மனோகர் திடீர் மரணம்!!

783

sruli

தொலைக்காட்சி தொடர்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சுருளி மனோகர், வெள்ளித்திரையிலும் நுழைந்து நிறைய படங்களில் நகைச்சுவை, குணச்சித்திர வேடத்தில் புகழ்பெற்றார்.

பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் கடந்த ஆண்டு இயக்குனர் என்ற படத்தையும் இயக்கினார். இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர், அதற்காக சிகிச்சையும் பெற்று வந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று அவர் மரணமடைந்தார். இவருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். சுருளி மனோகரின் மறைவுக்கு தமிழ் திரையுலகை சேர்ந்தவர்களும், தொலைக்காட்சி நடிகர், நடிகைகளும் தங்களது ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.