
அஜித் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் அஜித் இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.
இவருக்கு ஜோடியாக அனுஷ்கா, திரிஷா இருவரும் நடிக்கின்றனர். விவேக், தலைவாசல் விஜய், தேவி அஜித் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தில் வில்லன் வேடத்தில் அருண் விஜய் நடிக்கிறார்.
இப்படத்திற்கு ஹரீஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். டான் மெகர்துர் ஒளிப்பதிவை செய்து வருகிறார். சத்ய சாய் மூவிஸ் சார்பில் ஏ.எம்.ரத்னம் இப்படத்தை தயாரிக்கிறார்.
சமீபகாலமாக தான் நடிக்கும் படங்களின் படக்குழுவினருக்கு தன் கையால் பிரியாணி செய்து கொடுக்கும் வழக்கம் கொண்டவர் அஜித். அதேபோல் இந்த படத்தின் படக்குழுவினருக்கும் அஜித், அருண் விஜய் இணைந்து சாப்பாடு செய்து பரிமாறியுள்ளனர்.
இதனை திரிஷா அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். மேலும் சமையல் செய்து கொடுத்த அஜித் மற்றும் அருண் விஜய்க்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.





