சச்சினுக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்!!

596

Sachin

கிரிக்கெட்டில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான சச்சின் டெண்டுல்கர் 2012ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கபட்டார். ஆனால் அவர் மாநிலங்கள் அவைக்கே வருவதில்லை என ஐ.பி.எல் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ராஜீவ் ஷுக்ளா குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த ஆண்டு சச்சினின் வருகை வெறும் மூன்று சதவீதம் மட்டுமே என்று தெரிவித்துள்ள அவர் நடப்பு ஆண்டில் இதுவரை ஒரு நாள் கூட அவைக்கு வரவில்லை என கண்டனம் தெரிவித்துள்ளார். இதை போன்று மாநிலங்களவை உறுபினராக இருக்கும் பிரபல இந்தி நடிகை ரேகாவும் அவைக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாத இவர்களுக்கு எம்பி பதவி ஏன் வழங்கப்பட்டது என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் நரேஷ் அகர்வால் கேள்வி எழுப்பியுள்ளார். இவர்கள் போன்றவர்களை எம்.பிகளாக நியமிப்பது நாடாளுமன்றத்தை அவமதிப்பதற்கு ஈடானது என தேசிய வாத காங்கிரஸ் எம்பி திருபாதி கடுமையாக விமர்சித்துள்ளார்.