
இந்திய, தெலங்கானா மாநிலத்தில் நிஜாமா பாத் மாவட்டத்தை சேர்ந்த ராதா என்ற பெண் பூரி சாப்பிட்டபோது தொண்டையில் சிக்கி மூச்சடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்தார்.
பூரி சாப்பிட்டபோது மூச்சுவிட முடியாமல் அவதிப்பட்டார். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அங்கு ராதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
ராதாவின் சகோதரர் ரமேஷ், தனது அக்காவின் சாவில் மர்மம் இருப்பதால் யாராவது உணவில் விஷம் கலந்து இருக்கலாம் என பொலிசில் புகார் செய்தார்.
இதனை தொடர்ந்து பொலிஸார் ராதாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிரேத பரிசோதனையில், பூரி தொண்டையில் சிக்கி மூச்சு திணறி ராதா உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.





