பிறந்த நாள் கொண்டாட்டத்தில் 4 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட ஆடையில் ஜொலித்த தொழிலதிபர்!!

670

Gold Dress

மகாராஷ்டிராவில் தொழிலதிபர் ஒருவர், தனது பிறந்த நாளுக்காக 1.30 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க ஆடையை வாங்கியுள்ளார்.

மும்பையில் உள்ள இயோலா நகரைச் சேர்ந்த ஜவுளி தொழிலதிபர் பங்கஜ் பாரக் தங்கத்தின் மீது தணியாத ஆசையால் எப்போதுமே சுமார் இரண்டு கிலோ அளவுக்கு தங்க நகைகளை அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், அவர் தனது 45வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக 4 கிலோ எடையுள்ள சுமார் 20 பொற்கொல்லர்களின் கைவண்ணத்தில் 3200 மணி நேர உழைப்பில் உருவான 1 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள தங்க ஆடையை வாங்கியுள்ளார்.

இதுகுறித்து தொழிலதிபர் பங்கஜ் பாரக் கூறுகையில், 18 முதல் 22 கரட் தங்கத்தில் தைக்கப்பட்டுள்ள இதனை வழக்கமான ஆடை போன்று அணியலாம், துவைத்து உலர வைக்கலாம்.

மேலும், ஆடை கிழிந்தாலோ, சேதமடைந்தாலோ சரிசெய்து கொடுக்க அதை தயாரித்த ஜூவல்லரி நிர்வாகத்தினர் ஒப்புக் கொண்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.