செல்ஃபி புகைப்படம் எடுத்த குரங்கு : போட்டியிடும் விக்கிபீடியா!!

611

Wiki

குரங்கு எடுத்த செல்ஃபி புகைப்படத்திற்கு உரிமை கோரியவருக்கு விக்கிபீடியா பதில் அளித்துள்ளது. இந்தோனேஷியாவின் சுலவேசி தீவில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பாக அரிவகை மனிதக் குரங்கு செல்ஃபி புகைப்படம் எடுத்துக் கொண்டது.‘

சுலவேசியாவில் டேவிட் ஸ்லேட்டர் என்ற புகைப்படக்காரர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது, உலகில் அழியும் நிலையில் உள்ள மனிதக் குரங்கான மெக்காக் என்ற வகையான குரங்கு ஒன்று அவரது கமரொவை பறித்துக் கொண்டது.

பின்னர் தன்னை சரியாக பட்டனை அழுத்தி சரமாரியாக புகைப்படம் எடுக்க ஆரம்பித்தது. அனைத்து புகைப்படங்களும் மிகவும் நன்றாக வெளியாகியிருந்தது. இது பின்னர் உலகம் முழுவதும் பிரபலம் ஆகியது. இந்த புகைப்படத்தை விக்கிபீடியா தனது பக்கத்தில் பதிவு செய்தது.

இதனை பார்த்து கொதித்து எழுந்த டேவிட் ஸ்லேட்டர், புகைப்படம் செல்ஃபியாக இருந்தாலும் கமரா என்னுடையது. எனவே எனக்குக்தான் முழுஉரிமை உள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும், என்னுடைய அனுமதி பெறாமல் விக்கிபீடியா எப்படி புகைப்படத்தை பதிவு செய்யலாம் என்றும் இந்த செயலால் எனக்கு பெரும் பண இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும் குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும் புகைப்படத்திற்கான வெளியீட்டு உரிமை எனக்கே உள்ளது. நான் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்க உள்ளேன் என்று டேவிட் ஸ்லேட்டர் கூறியுள்ளார்.

ஆனால் புகைப்படம் மனிதன் எடுத்தது இல்லை. என்று விக்கிபீடியா தனது தரப்பு வாதத்தை இங்கு முன் வைத்துள்ளது. புகைப்படம் குரங்கு எடுத்த செல்ஃபி படம்.

இதற்கு பதிப்புரிமை உரிமை கோர அவருக்கு உரிமையில்லை என்று கூறி புகைப்படத்தை இணையத்தில் இருந்து எடுக்க விக்கிபீடியா மறுத்துள்ளது.