பாம்புடன் உணவு உண்டு, படுத்து உறங்கும் துணிச்சலான சிறுமி!!(வீடியோ)

906


இந்தியாவில் சிறுமி ஒருவர் பாம்புடன், பயப்படாமல் விளையாடி மகிழ்ந்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கஜோல் கான் (11) என்ற சிறுமி விஷம் வாய்ந்த பாம்புடன் உணவு உண்டு, ஒரே படுக்கையில் படுத்து வாழ்ந்து வருகிறார். மேலும் இவர் பல முறை பாம்பிடம் கடி வாங்கியுள்ளார்.இவரது தந்தை பாம்பு பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்ததால் இவருக்கு இதில் ஆர்வம் வந்துள்ளது. இவரது தந்தை தற்போது இவரின் அண்ணணுக்கு இந்த தொழிலை கற்றுக் கொடுத்துவிட்டு ஒய்வு எடுத்து வருகிறார்.

இதனை அடுத்து தற்போது கஜோலும் குடும்ப தொழிலில் ஈடுபடுவார் என்பது குறிப்பிடதக்கது. பாம்புடன் இவர் நட்புடன் பழக ஆரம்பித்த நாளிலிருந்து, கால், கை, வயிறு, கண்ணம் என பல்வேறு இடங்களில் கடிவாங்கியிருந்தாலும், இவருக்கு பாம்பு மீது அன்பு அதிகரித்துள்ளது.இதுகுறித்து கஜோல் கூறுகையில், எனக்கு பாம்புடன் விளையாடுவது தான் பிடித்துள்ளது என்றும் என்னை கடித்தால் எனது தந்தை காயத்திற்கு மருந்து வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
S1 S2 S3 S4 S5 S6