வவுனியா கூமாங்குளம் அருள்மிகு ஸ்ரீ வீரபத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் 2014!!

782

ஜய வருடம் ஆடி மாதம் 16ம் நாள் (01.08.2014) பஞ்சமி திதியும் அத்த நட்சத்திரமும் அமிர்ந்த சித்த யோகமும் கூடிய சுப தினத்தில் வருடாந்த அலங்கார உற்சவம் சிறப்பாக ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

08.08.2014 (8ம் நாள்) வெள்ளிக்கிழமை கூமாங்குளம் காளி கோவில் அறநெறிப் பாடசாலை மாணவர்களால் ஆசிரியர் செல்வி.டிலானி பிரியாவின் நெறியாக்கையில் நடன நிகழ்வு நடைபெற்றது.

10.08.2014 ஞாயிறு காலை 9.00 மணிக்கு முத்துமாரியம்மன் ஆலயத்தில் இருந்து பாற்குடம், தீச்சட்டி எடுத்து வரப்பட்டு 10 மணிக்கு அம்பாளுக்கு அபிஷேகம், தீர்த்தோற்சம் நடைபெறும்.

மாலை 4 மணிக்கு கூமாங்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இருந்து காவடிகள், பறவைக்காவடிகள் எடுக்கப்பட்டு மாலை ஆலயத்தை வந்தடையும். அதன் பின்னர் தீ மிதிப்பு வைபவம் நடைபெறும். 11.08.2014 திங்கள் வைரவர் மடையுடன் அலங்கார உற்சவம் சிறப்புற நிறைவடைய உள்ளது.

-பாஸ்கரன் கதீஷன்-

1 2