வவுனியா ஏ9 வீதி – தாண்டிக்குளத்தில் வெடிபொருள்கள் மீட்பு!!

406

இன்று (09.08) வவுனியா, தாண்டிக்குளம் ஏ9 வீதியில் குடிதண்ணீர் விநியோகக் குழாய்களை பொருத்துவதற்குரிய நடவடிக்கைகளை நேற்கொள்ளும் பொது அதிலிருந்து வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.

இங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இதனை அடுத்து அங்கு சென்ற வவுனியா பொலிஸார் வெடிபொருள்களை மீட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா ஏ9 வீதியில் உள்ள தாண்டிக்குளம் பகுதியில் பிரமண்டு வித்தியாலயத்துக்கு அருகில் தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்புச் சபையினர் நீர்க்குழாய்களைப் பொருத்துவதற்காக நிலத்தை கனரக வாகனங்களின் உதவியுடன் தோண்டியுள்ளனர். இதன்போது அப்பகுதியில் வெடிபொருள்கள் தென்பட்டுள்ளன.

இதனையடுத்து இங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் சம்பம் குறித்து பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் ஆர்.பி.ஜி. ஷெல்கள் – 2, மோட்டார் ஷெல்கள் – 2, கைக்குண்டு – 1 மற்றும் ரவைகள் என்பனவற்றை மீட்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வவுனியா இறம்பைக்குளம் பகுதியில் குள புனரமைப்பின் போது கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

va va2