வட்ஸ்அப் பயன்படுத்தும் பெண்களுக்கு காத்திருக்கும் ஆபத்து!!

513

Whatsapp

மாறிவரும் சமூகத்தில் நமது வசதிக்கேற்ப நாம் பல்வேறு தொழிநுட்ப வசதிகளை பயன்படுத்தி வருகிறோம். அதன் மூலம் பல்வேறு பயன்கள் கிடைத்தாலும், அதற்கேற்ப ஆபத்துகளும் பெருகிக்கொண்டுதான் வருகிறது.

அந்த வகையில் இப்போது உள்ள இளம் தலைமுறையினரை ஆட்டிபடைக்கும் ஒன்று சமூக வலைதளங்கள். பெண்களுக்கு ஏற்கனவே சமூக வலைதளங்கள் மூலமாக ஆபத்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

ஆனால் தற்போது செல்போனில் பயன்படும் வட்ஸ்அப் மூலமாகவும் வரத்தொடங்கியுள்ளது. அது எப்படி நான் என் செல்போனில் தனிப்பட்ட முறையில் உபயோகிக்கும் அப்ஸ் தானே. அதில் என்ன பிரச்சனை இருக்கிறது என்ற கேள்வி அனைவருக்கும் வரும்.

உங்களின் மொபைல் நம்பர் மற்றவர்களிடம் இருந்தால் மட்டுமே அவர்களால் உங்கள் வட்ஸ்அப் கணக்கை பார்க்கவும், உங்கள் புகைப்படத்தை தரவிறக்கம் செய்யவும் முடியும். ஆனால் உங்களை தெரியாத நபர்கள் கூட உங்களை தொடர முடியும். எப்படி என்று கேட்கிறீர்களா?

உங்களது நண்பர்களில் சிலர் வட்ஸ்அப் குழுக்களில் உங்கள் பெயரையும் இணைக்கும் போது உங்கள் எண் குழுவில் உள்ள அனைவருக்கும் பகிரப்படப்படுகிறது என்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்.

உங்களுக்கு எதிர்முனை நபர் யார் என்று தெரியாத போது அவர் தவறான பெயரில் உங்களை தொடர்பு கொண்டு உங்களது தகவல்களை பெற வாய்ப்புள்ளது.

இதனை உங்களது பிரைவஸி செட்டிங்கிற்கு சென்று உங்கள் புகைப்படம், ஸ்டேட்டஸ், லாஸ்ட் சீன் ஆகியவற்றை My Contacts அல்லது Only me ஒப்ஷன்களை பயன்படுத்தி உங்களை பாதுகாக்கலாம்.

குழுக்களில் பெரும்பாலும் இணைவதையும், அதில் அதிதீவிரமாக செய்திகளை அனுப்புவதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
அதுமட்டுமின்றி ப்ளாக் ஒப்ஷனை பயன்படுத்தி உங்களுக்கு தொல்லை தருபவரை உங்கள் கணக்கை தொடராமல் தடுக்கும் வசதியும் வட்ஸ்அப்பில் உள்ளது.

மிக கவனமாக செயல்படுங்கள், சிறிய விடயம் மோசமானதாக மாறக்கூடும். உங்கள் பெண் நண்பர்களுக்கும் இச் செய்தியை பகிருங்கள்.

Whatsapp1