ஒன்றுடன் ஒன்று மோதிய மூன்று வாகனங்கள் : ஒருவர் பலி!!

254

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காலி – கொழும்பு வீதியில் வெட்டுமகட பிரதேசத்தில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று (03) இரவு இடம்பெற்றுள்ளது.

களுத்துறையிலிருந்து காலி நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியில் பயணித்த சைக்கிளுடன் மோதி பின்னர் பஸ் உடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



உயிரிழந்தவர் களுத்துறை தெற்கு பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடையவர் ஆவார். இதனையடுத்து, பஸ் சாரதியும் முச்சக்கரவண்டியின் சாரதியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.