பிரபல நடிகை ஊர்வசிக்கு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்!!

547

Oorvasi

தமிழ், மலையாள திரைப்பட கதாநாயகியாக இருந்த ஊர்வசிக்கு இரண்டாவது கணவர் மூலம் தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது.

நடிகை ஊர்வசிக்கும் மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயினுக்கும் 2000ல் திருமணம் நடந்துள்ளது, இவர்களுக்கு தேஜாலட்சுமி என்ற பெண் குழந்தை உள்ளது. கடந்த 2008ல் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததோடு, விவாகரத்தும் செய்து கொண்டுள்ளனர்.

இதனையடுத்து, கடந்த வருடம் சென்னையில் கட்டுமான தொழில் செய்து வரும் சிவபிரசாத் என்பவரை ஊர்வசி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், கர்ப்பமாக இருந்த ஊர்வசிக்கு, நேற்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.