வவுனியா புதுக்குளம் பகுதியில் இராணுவ வாகனம் மோதியதில் நால்வர் படுகாயம்!!

568

Acci

வவுனியா புதுக்குளம் பகுதியில் இராணுவ கன்டெயினர் வாகனத்தில் மோதுண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற நால்வரும் வாகன சாரதியும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுக்குளம் பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்ற நால்வர் மீது இராணுவ கன்டெய்னர் வாகனம் மோதியிதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற மருக்காரம்பளை வீதி மணிபுரத்தை சேர்ந்த ராஜன் குருபன் (23) எஸ்.கிசோகுமார் (21) த.நந்தகுமார் (24) ரா.ஜெனிசன் (20) ஆகியோரும் இராணுவ வாகன சாரதியான பெரியகாடு இராணுவ முகாமை சேர்ந்த கோப்ரல் லக்மல் ஆகியோருமே வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.