மனைவியை கொடூரமாக கொலை செய்துவிட்டு பொலிஸ் நிலையம் சென்ற கணவர்!!

413

அளுத்கம தர்கா நகரம், குருந்துவத்த சமகி மாவத்தை பகுதியில் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இன்று மதியம் தனது மனைவியின் கழுத்தில் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்துள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர். குடும்ப தகராறு காரணமாக சந்தேக நபரானகணவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.

பின்னர் கூரிய ஆயுதங்களுடன் பொலிஸ் நிலையம் சென்று கணவர் சரணடைந்ததாக அளுத்கம பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் கொலைக்கான காரணம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.