
கதை இல்லாத தமிழ் சினிமா கூட இருக்கிறது, ஆனால் கதாநாயகிகள் இல்லாத தமிழ் சினிமாவை பார்ப்பது அரிது. ஆனால் தற்போதைய திரையுலகில் ஹீரோயின்களை வெறும் கவர்ச்சிக்கும், பாடலுக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.
அந்த வகையில் சமீபத்தில் வெளியான சிகரம் தொடு ட்ரைலரில் காமெடி நடிகர் சதீஸ், பெண்களை மிகவும் கேவலப்படுத்தும் விதமாக பிசாசு, பேய் போன்ற வார்த்தைகளை கூறுகிறார். இதற்கு முன்பும் எதிர்நீச்சல் படத்திலும் இவர் இந்த மாதிரியான வசனங்களை பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.





