முதுகெலும்பற்ற இந்திய அணி : கவாஸ்கர் ஆவேசம்!!

491

Gavaskar

இந்திய அணியின் வரலாறு காணாத தோல்வியால் இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் கவாஸ்கர் கடும் கோபத்தில் இருக்கிறார்.

இந்திய அணி மான்செஸ்டர் டெஸ்டில் யாரும் எதிர்பாராத மோசமான தோல்வியை தழுவியது. இதனையடுத்து இந்திய அணி அனைவரின் விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளது. இந்த டெஸ்ட்டின் தோல்வி குறித்து இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் கவாஸ்கர் விமர்சித்து பேசியுள்ளார்.

இது பற்றி அவர் கூறுகையில், கடந்த சில இன்னிங்ஸ்களில் இந்திய வீரர்கள் தலையை தொங்கவிட்டபடி வந்த காட்சிகளை மட்டும் தான் காண முடிந்தது.

இந்த டெஸ்டில் முதுகெலும்பு இல்லாதது போல் இந்திய வீரர்கள் விளையாடினர். சாதாரணமான பந்து வீச்சில் கூட விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இது போன்ற நிலையில் அவர்கள் எப்படி போராடுவார்கள் என்று நினைக்க முடியும் என்று கூறியுள்ளார்.

இங்கிலாந்து முன்னாள் அணித்தலைவர் மைக்கல் வோகன் கூறுகையில், ஆடுகளம் துடுப்பாட்டத்திற்கு சாதகமாகவே இருந்தது. வேகப்பந்து வீச்சில் பந்து ஸ்விங் ஆகவில்லை.

சுழற்பந்து வீச்சில் பந்து சுழன்று திரும்ப வில்லை.இப்படிப்பட்ட நிலையிலும் கூட இந்திய வீரர்களால் இங்கிலாந்தின் பந்து வீச்சை சமாளிக்க முடியவில்லை.

அடுத்த இரு நாட்கள் மழை வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருந்த நிலையில், இந்திய அணி ஆடிய விதத்தை பரிதாபரகமானது என்று மட்டுமே வர்ணிக்க முடியும் என்று கூறியுள்ளார்.