பெண் பொலிசை தூக்கி கொண்டு நடனம் ஆடிய ஷாருக்கான் சர்ச்சையில்!!

836

Police

மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பனர்ஜி முன்னிலையில் பெண் பொலிசை தூக்கி நடனம் ஆடி நடிகர் ஷாருக்கான் சர்ச்சையில் சிக்கி கொண்டுள்ளார்.

சகோதர பாசத்தின் பெருமையை உணர்த்தும் ரக்ஷா பந்தன் விழா நேற்று வடமாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பெண்கள் தங்கள் சகோதரர்களுக்கும், சகோதரர்களாக கருதுபவர்களுக்கும் கையில் ராக்கி கயிறு கட்டினார்கள்.

இந்த நிகழ்ச்சி கொல்கத்தாவின் நேதாஜி ஸ்டேடியத்திலும் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ஷாருகானுக்கு முதலமைச்சர் மம்தா பனர்ஜி ராக்கி கயிறு கட்டினார்.

அப்போது நிகழ்ச்சியில் நடனம் ஆடிய நடிகர் ஷாருகான் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் பொலிசை தூக்கி ஆடியுள்ளார். பின்னர் பெண்ணும் அரங்கில் ஷாருகானுடன் நடனம் ஆடியுள்ளார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எப்படி சீருடையில் இருந்த ஒரு பெண் பொலிஸ் மேடையில் நடனமாட அனுமதிக்கப்பட்டார் என்று பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ரிதிஷ் திவாரி கேள்வி எழுப்பியுள்ளார். இப்பிரச்சனையை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன. காங்கிரஸ் கட்சியும் இதே கேள்வியை எழுப்பியுள்ளது.

ஆனால் இது எதார்த்தமாக நடந்தது என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பத்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.