வவுனியா நோக்கி பயணித்த பேரூந்தில் தவறி விழுந்த பயணியை நடுவீதியில் விட்டுச் சென்ற அரச பேருந்து!!

2456

நேற்று முன்தினம் (28.04.2025) இரவு கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி வந்த அரச பேருந்தில் இருந்து ஒரு நபர் தவறுதலாக கீழே விழுந்த பின் அந்த நபரையும் உடன் வந்த நபரையும் இடையிலே விட்டுவிட்டு அரச பேருந்து ஒன்று சென்றுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, குறித்த பேருந்தில் இரு நண்பர்கள் கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி பயணம் செய்துள்ளனர்.

இரு நண்பர்களும் பயணத்தை மேற்கொண்ட போது இரு நண்பர்களில் ஒருவர் தவறுதலாகவோ அல்லது வேறு காரணத்தாலோ கீழே விழுந்து உள்ளார். அதனை அவதானித்த உடன் வந்த நண்பர் பேருந்தை நிருத்துமாறு சத்தம் எழுப்பியுள்ளார்.



இருப்பினும், அந்த சத்தம் சாரதிக்கு கேட்காத நிலையில் பின் பயணிகளின் கோரிக்கைக்கமைய நடத்துனர் இணங்க பேருந்தை சுமார் 1km தூரத்திற்கு அப்பால் பேருந்தை நிருத்தியுள்ளார்.

சிறிது நேரத்தின் பின்னர் காலை 1:30 மணி அளவில் விழுந்த நபரையும் அவரின் நண்பரையும் இடையிலே விட்டுவிட்டு பேருந்து புறப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக உடன் வந்த பயணிகள் அவர்கள் இருவரையும் ஏற்றிக்கொண்டு செல்லுமாறு சாரதியையும் நடத்துனரையும் கேட்ட போது அவர்கள் பயணிகளின் கருத்துக்கு இணங்கவில்லை.

மேலும் குறித்த பேருந்து யாழ்ப்பாணம் கொழும்பு என அடையாளப்படுத்தி இருந்தும் ஆனால் வவுனியா மட்டும் தான் சென்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இவ்வாறான குழப்பத்தால் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர் மற்றும் பேருந்தில் வந்த சாரதிக்கும் நடத்துனர்க்கும் தமிழ்மொழி தெரியாமல் இருப்பது வருத்தத்திற்குரிய விடயமாகும்.