வவுனியாவில் நடந்த விபத்தில் சிக்கியவர் கோமா நிலையில் வைத்தியசாலையில்!!

628

Accident

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை (07.08) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியவர் கோமா நிலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக வவுனியா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..

வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் வந்து கொண்டிருந்த ஒருவர் மீது எதிரே வந்த மோட்டார் சைக்கில் மோதியதில் துவிச்சக்கர வண்டியில் வந்தவர் தலையில் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் அவர் கோமா நிலைமைக்கு உள்ளாகியுள்ளார்.

மேற்படி சம்பவத்தில் சிக்கி கோமா நிலைமைக்கு உள்ளானவர் வவுனியா மகாறம்பைக்குளத்தைச் சேர்ந்த எஸ்.கனகரட்ணம் (67) என தெரிய வருகின்றது.