டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தில் சங்கக்கார : 5ம் இடத்தில் மத்தியூஸ்!!

702

SL

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் துடுப்பாட்ட தரவரிசையில் இலங்கை அணி வீரர் குமார் சங்கக்கார முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிராக காலியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இனிங்ஸில் 221 ஓட்டங்களை விளாசிய அவர், டெஸ்ட் தரவரிசையில் 899 புள்ளிகளுடன் முதலாவது இடத்தில் இருந்த தென்னாபிரிக்காவின் வீரர் வில்லியர்ஸை பின்தள்ளி 920 புள்ளிகளுடன் முதலிடத்தை அடைந்துள்ளார்.

மேலும் இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்யூஸ் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.