மகனை காப்பாற்ற தந்தை செய்த மனதை உருக்கும் செயல் : இறுதியில் நேர்ந்த சோகம்!!

201

பலாங்கொடை – சமனலவெவ பகுதியில் நீராடச்சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவிக்கபடுகின்றது பெலிஹூல் ஓயா ஆற்றுக்கு நேற்று மாலை தந்தை ஒருவரும் அவரது மகனும் நீராடச்சென்றுள்ளனர்.

இதன்போது மகன் நீரில் மூழ்கிய நிலையில், அவரை காப்பாற்றுவதற்கு முற்பட்ட போதே தந்தை நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

இந்தநிலையில், சமனலவெவ காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய தந்தை மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



பலாங்கொடை அளுத்நுவர பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.