தொடர்ந்தும் தலைமறைவாகியுள்ள டீச்சர் அம்மா!!

256

இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள, சர்ச்சைக்குரிய ஆசிரியை ஹயேசிகா பெர்னாண்டோ தொடர்ந்தும் தேடப்பட்டு வருகிறார்.

அவரை கைது செய்வதற்காக, மூன்று பொலிஸ்; குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது தனியார் கல்வி நிலையத்தில், ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் மாணவர்களிடையே ‘டீச்சர் அம்மா என்று அறியப்பட்ட ஹயேசிகா பெர்னாண்டோ, கடந்த வாரம் நீர்கொழும்பில் இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.



இந்தநிலையி;ல் இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து டீச்சர் அம்மா, தாம் கைது செய்யப்படுவதைத் தவிர்த்து வருகிறார்.

கட்டான பொலிஸார் விசாரணைகளை நடத்தி வரும் நிலையில், குறித்த ஆசிரியை அந்த இளைஞரின் இடுப்பில் உதைத்ததாகவும், பின்னர் அவரது கணவரும் மேலாளரும் அந்த இளைஞரை தாக்கியதாகவும் தெரிய வந்துள்ளது.

தனது ஊழியர்களில் ஒருவரான இளம் பெண் ஒருவருக்கு, கணினி செயல்பாடுகளில் பயிற்சி அளிக்க குறித்த இளைஞர் பணியமர்த்தப்பட்டதாகவும், இந்தநிலையில் குறித்த இளைஞர், இளம் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் காரணமாகவே, சம்பந்தப்பட்ட இளைஞர், சர்ச்சைக்குரிய ஆசிரியை மற்றும்; இருவரால் இளைஞர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பொலிஸாரின் கூற்றுப்படி, ஆசிரியை தனது வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும், தமது தொலைபேசியில் இருந்து அனைத்து தகவல்தொடர்புகளையும் துண்டித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.