வவுனியாவில் வறட்சியை போக்க அவசரக் கிணறுகள்!!

824

Kinaru

வவுனியாவில் குளங்களில் நீர் இன்மையால் விவசாய நிலங்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றது. குறிப்பாக வவுனியா பகுதிகளிலுள்ள குளங்களில் நீர் இன்மையினால் பல விவசாய நிலங்கள் அழிவடைந்து வருகின்றது. இந் நிலையில் 25ஏக்கர் கொண்ட வவுனியா கல்நாட்டினங்குளம் பகுதியல் அமைந்துள்ள துரவிக்குளம் பகுதியிலுள்ள விவசாய நிலத்திற்கான குளம் வற்றியதை தொடர்ந்து விவசாய நிலத்திற்கான நீர் இல்லாமல் காணப்படுகின்றது.

இதனையடுத்து இவ்விடத்தினை மேற்படி விவசாயிகள் வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து மேற்படி விவசாய நிலத்திற்கு நீர் கிடைக்கும் வகையில் உடனடியாக கிணறு ஒன்றினை அமைப்பதற்கான ஒழுங்கு செய்யுமாறு பணித்தார்.

இந் நிலையில் கிணறு அமைப்பதற்கான வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இவ் கிணறு அமைப்பதற்கு அமைச்சரின் ஒதுக்கீட்டு நிதியில் இருந்து 50ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.