ஜப்பானில் பரபரப்பாக விற்பனையாகும் செயற்கை மனைவி!!(காணொளி)

513

ஜப்பானில் உள்ள நிறுவனம் ஒன்று செயற்கை மனைவியை உருவாக்கியுள்ளது. ஜப்பானில் உள்ள ஓரியன்ட் தொழிற்சாலை (Orient Industry) என்ற நிறுவனம் அச்சு அசலாக பெண்களின் பொம்மைகளை விற்பனை செய்து வருகிறது.

இந்த பொம்மைகளின் சிறப்பு அதனுடைய தோல் மற்றும் கண்கள் என கூறப்படுகிறது. உண்மையான பெண்களை போலவே கண்களும், தோல்பகுதிகளும் இருப்பதால் இதை பார்ப்பவர்கள் பெண் என்றே நம்பத்தொடங்கிவிடுவார்கள்.

1,000 யூரோ விலையில் விற்கப்பட்டு வரும் இந்த பெண் பொம்மை பல்வேறு வடிவங்களில் கிடைக்கின்றது. இந்த பொம்மையை பாலியல் உறவிற்கும் பயன்படுத்தும்படி வடிவமைக்கப்பட்டுள்ளதால் இதை ஒரு செயற்கை மனைவி என்றே இந்த நிறுவனம் அழைத்து வருகின்றது.

ஜப்பானிய இளம் ஆண்கள் இந்த செயற்கை மனைவியை விரும்பி வாங்கிச்செல்வதாகவும் கூடிய விரைவில் இந்த பொம்மைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இருப்பதாகவும் ஓரியன்ட் தொழிற்சாலை (Orient Industry) தெரிவித்துள்ளது.

11 12 13